சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி செலவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெற விண்ணப்பித்தது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். சென்னை மெரினா கடற்கரையில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படகு இல்லம் இருந்த இடத்தில் 2.75 ஏக்கர் பரப்பளவில் பாய்மர படகு அகாடமி அமைக்க திட்டமிட்டுள்ளது.
Advertisement