ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரகாஷ் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் புளியம்பட்டியில் மிட்டாய் வாங்கித் தருவதாக சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக வழக்கு. பிரகாஷுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையுடன் ரூ.20,000 அபராதம் விதித்தது ஈரோடு மகளிர் நீதிமன்றம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement