மதுரை : ராமநாதபுரம் சமஸ்தான வாரிசுரிமை விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. நாகேந்திர சேதுபதி என்பவர் போலியான வாரிசு சான்றிதழ் பெற்று சொத்துக்களை அபகரிப்பதாக வழக்கறிஞர் கிரிராஜ் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்து, சான்றிதழ் போலியானது என நிரூபணமானால், நாகேந்திர சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மூன்று வாரத்தில் விசாரணையை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
+
Advertisement