Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமின் நிபந்தனைகள்: காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: மதுரை ஆதீனம் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால், வசிக்கும் இடம் சென்று காவல்துறை விசாரணை நடத்தலாம் என்றும், காவல்துறை விசாரணைக்கு மதுரை ஆதீனம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. விசாரணை முடியும் வரை சாட்சியங்களை கலைக்க கூடாது; தலைமறைவாக கூடாது. தலைமறைவானால் மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், ரூ.10,000க்கான இரு நபர் ஜாமினை மதுரை ஆதீனம், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.