சென்னை: எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருளை கடத்திய வழக்கில்சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு பிப்.2020-ல் தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சோதனை நடத்திய தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யபட்ட கவரில் 1.83 கிராம் எடையுள்ள 91 எல்.எஸ்.டி. என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கபட்டிருந்தது.
Advertisement