மதுரை: தூத்துக்குடியில் 1999ல் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்த விவகாரத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள காவலர்களுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை விசாரித்து குற்றச்சாட்டின் முகாந்திரம் அடிப்படையில் தண்டனை வழங்கி உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளன. தூத்துக்குடியில் 1999ல் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக வின்சென்ட் என்பவரை போலீஸ் கைது செய்தது. விசாரணை கைதியாக காவல்நிலைய சிறையில் இருந்த வின்சென்ட் மர்மமாக உயிரிழந்தார். விசாரணைக் கைதி உயிரிழப்பில் 25ஆண்டுக்கு பின் 2024ல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கடந்த ஏப்ரலில் தூத்துக்குடி கோர்ட் 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
+
Advertisement