குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமியும் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு
காஞ்சிபுரம் : குன்றத்தூர் அருகே கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமியும் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2018ல் மூன்றாம் கட்டளையில் தனது 2 குழந்தைகள் அஜய் (6), கார்னிகா (4) ஆகியோரை கொன்றார் அபிராமி. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தந்து கொன்றார்.