கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படும்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, முதற்கட்டமாக அரசு விரைவுப் பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.