சிறுநீரக விற்பனை முறைகேட்டில் ஈடுபடும் மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை :மருத்துவ இயக்குநரகம்
சென்னை : இடைத்தரகர் மூலம் சிறுநீரகம் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏழைகளை குறிவைத்து சிறுநீரக விற்பனை முறைகேட்டில் ஈடுபடும் மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆசை வார்த்தை கூறும் இடைத்தரகர்கள் மீது நம்பிக்கை வைத்து சிறுநீரகம் உறுப்பு தானம் செய்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.