டெல்லி : “ஆளுநர்கள் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது. விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பை திருப்பி அனுப்ப வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குடியரசுத் தலைவர் கேட்டுள்ள 14 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு தீர்ப்பிலேயே பதில் உள்ளது என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.