காமராஜர் பிறந்தநாளில் மாபெரும் முன்னெடுப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்: முதல்வர் பேச்சு
சென்னை: காமராஜர் பிறந்தநாளில் மாபெரும் முன்னெடுப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன் என இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் "உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் காரணமாக அரசு மேல் நம்பிக்கை வைத்து இன்னும் பலர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 5,000 முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், முகாமில் விண்ணப்பம் கொடுத்தால்போதும் நிச்சயம் உரிமைத் தொகை கிடைக்கும். மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவதுதான் திட்டத்தின் நோக்கம்" எனவும் முதல்வர் பேசினார்.