சென்னை: பாஜக ஆட்சியை கவிழ்த்து ஜெயலலிதா வரலாற்றுப் பிழை செய்தார்; 1998ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம் செய்தார். பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததால் மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி 15 ஆண்டுகள் இருக்க நேரிட்டது. பாஜக ஆட்சியை கொண்டு வந்ததும் அதிமுகதான் கவிழ்த்ததும் அதிமுகதான்; வரலாற்றுப் பிழையை செய்துவிட்டோம். சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் ஜெயலலிதா வரலாற்றுப் பிழை செய்துவிட்டார். பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் ஜெயலலிதாவையே அதிமுக மூத்த தலைவர் விமர்சித்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
+
Advertisement