ஜப்பான்: ஜப்பானில் தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவன அமர்வை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் கீழ் தொழில் வழிகாட்டி நிறுவனம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்ய, விரிவாக்கம் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியை பெற்றுத்தருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில் துவங்க வழிகாட்டுதல், சேவை வழங்கும் வகையில் அந்நாடுகளில் 'கைடன்ஸ் டெஸ்க்' அமர்வு தொடங்கப்பட்டுள்ளது. தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் ஜப்பான் அமர்வை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தொடங்கி வைத்தார்.
+
Advertisement