நெல்லை: நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் சகோதரியை கவின் காதலித்து வந்த நிலையில் நேற்று ஓடஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சுர்ஜித், காவல் சார்பு ஆய்வாளர் சரவணனின் மகன் ஆவார். சார்பு ஆய்வாளர் சரவணன் தூண்டுதலின் பேரில் சுர்ஜித் கொலை செய்ததாக கவின் குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர். கவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement