டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பதாகைகளை ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement