டெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் இறந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 90 புலிகளும், கேரளாவில் 28 புலிகளும் உயிரிழந்துள்ளன. காப்பகங்களுக்கு வெளியே உள்ள புலிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதற்குத் தீர்வு காணும் வகையில் புதிய திட்டம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
+