இறந்த நிலையில் இந்தியா பொருளாதாரம்; இது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி
டெல்லி: இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்; இது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது; வெளியுறவு கொள்கையை கீழ் நிலைக்கு கொண்டு சென்றது. கவுதம் அதானிக்கு ஏற்ப உதவி செய்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எம்.பிக்கள் குழுவை அனுப்புனீர்கள்; எந்த நாடாவது பாக்.கை கண்டித்ததா?. இந்தியாவை எப்படி நடத்திச் செல்வது என்று ஆளும் பாஜக அரசுக்கு தெரியவில்லை என ராகுல் தெரிவித்தார்.