ரெஃபெக்ஸ் குழுமத்தில் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடித்தது வருமானவரித்துறை
ரெஃபெக்ஸ் குழுமத்தில் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடித்தது வருமானவரித்துறை. மும்பை, சென்னை, காஞ்சிபுரம் உள்பட ரெஃபெக்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரி சோதனை சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.70 கோடிக்கும் மேல் கணக்கில் வராத தங்கம், வெள்ளி, ரொக்கம் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சுமார் ரூ.365 கோடி முதலீடு செய்யப்பட்டதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


