ஜெய்ப்பூர்: நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என பல கனவுகள் எனக்கு உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக செய்யப்படாத பணிகளை கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது. கடந்த தேர்தலின்போது பாஜக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றம். மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. ராணுவத்தை அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவதே காங்கிரஸின் அடையாளம் எனவும் விமர்சனம் செய்தார்.
+
Advertisement