சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டார். கவின் கொலை வழக்கில் காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். 2026ல் கூட்டணி அரசு அமையாது. 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். முதல்வரின் சுற்றுப்பயணத்தில் மக்கள் திரளானோர் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். திமுகவில் இருந்து மதிமுக வெளியேறுவதாக சில ஊடகங்கள் அபாண்டமான செய்திகள் வெளியிட்டதாக வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். இந்துத்துவ சக்திகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் எக்காரணம் கொண்டும் மாற்றம் இருக்காது. பாஜகவுடன் இம்மிளவும் மதிமுக உறவு வைத்துக் கொள்ளாது என்றும் கூறினார்.
+