தருமபுரி: ஒகேனக்கல் அருவியில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீரான நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் உற்சாகமாக குளித்தனர்.
+