சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற வாசலில் கைதிக்கு கஞ்சா பொட்டலம் தந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதி சீனுவுக்கு கஞ்சா பொட்டலம் தர முயற்சி செய்தார். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்.
+
Advertisement