சென்னை: தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. மதுரை நகரம், நாகை 102, தூத்துக்குடி, வேலூர், கடலூரில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 101, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
+
Advertisement