டெல்லி: நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்களை நிறைவேற்றி முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராட்டியுள்ளார். தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவில் 2வது இடம் பெற்றுள்ளது. தேசிய அளவிலான தனி நபர் வருமானம் ரூ.1.14 லட்சம் என்பதை விட தமிழ்நாடு ரூ.1.96 லட்சமாக உயர்ந்துள்ளது. மக்களின் முழு ஆதரவையும் பெற்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அவர் பாராட்டியுள்ளார்.
+
Advertisement