Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு -பிரபாகர்

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு 10,000 பேரும், நடப்பாண்டில் தற்போது வரை 11,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 311 மையங்கள் உள்பட தமிழ்நாட்டில் 492 மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெறும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று கூறினார்.