ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய உத்தரவு
டெல்லி: ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு ஆக.19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


