திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் உடல், திருவனந்தபுரத்தில் இருந்து அவரது சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்த வழிநெடுக மக்கள் பெருமளவில் திரண்டதால் முதல் 30 கிலோமீட்டரைக் கடக்கவே 8 மணிநேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. CPI(M) மாவட்ட அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று மாலை இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது.
Advertisement