Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016-2021 வரை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 571.30% சொத்து சேர்த்ததாக சத்யா பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சத்யா பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்யா, கணவர் பன்னீர்செல்வம் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.