நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை
மும்பை: நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்குர் உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் மும்பை என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்கூர் , லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2008ல் செப். 29-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிக்குசௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது.