அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதில்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. வருமான வரிக் கணக்கில் கூறப்பட்ட கணக்கிற்கும் வேட்புமனுவில் உள்ள கணக்கிற்கும் இடையே ரூ.14 கோடி வித்தியாசம் உள்ளது. முழு விசாரணைக்கு பிறகே வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது குறித்து கே.சி வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.