சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.97 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,896 கனஅடியில் இருந்து 21,514 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement