கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள பல்லகச்சேரி கிராம ஏரியானது பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. இந்த ஏரியில் மீன் குஞ்சுகள் வளர்க்க ஏலம் விடப்பட்டது. மீன்கள் அறுவடை முடிந்ததால் இன்று காலை மீன்பிடி திருவிழா அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு இன்று சுமார் 2 டன் மீன்களை பிடித்து சென்றனர்.
Advertisement