சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 வளாக கல்லூரிகளில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது. அண்ணா பல்கலை. கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். தன்னாட்சி கல்லூரிகள் கல்லூரி திறப்பு தேதியை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.