தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது: வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ.1700 கோடி வசூல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கமாட்டோம் என அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா உறுதியளித்துள்ளார்.