டெல்லி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் ஆர்.ஜே.டி. தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தன் பெயர் இடம்பெறாததால் சட்டமன்றத் தேர்தலில் எப்படி போட்டியிடுவேன். எனது பெயர் இடம்பெறாதது ஜனநாயக படுகொலை, வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயல். உச்சநீதிமன்ற பரிந்துரைகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் புறந்தள்ளிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
+