Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அறியாதவர்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலடி

சென்னை: தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அறியாதவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். லைட்டரை தடை செய்ய அதிமுக முயற்சி எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தத்தால் ரூ.20க்கும் குறைவான லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. லைட்டர் உதிரி பாகங்களுக்கும் ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கடலை மிட்டாய் உற்பத்திக்கான பொது வசதி மையமும் 2026

ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.