டெல்லி: கடந்த 10 ஆண்டில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 -வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங். எம்.பி. சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 1,398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்குகளில் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாததால் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. 10 ஆண்டில் ED தொடர்ந்த வழக்குகளில் 0.13% வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+