சென்னை: திமுகவுக்கு பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் ஆகியவை பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெல்வது மட்டுமே இளைஞரணியினரின் இலக்காக இருக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தொடர்வதே நோக்கமாக இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
Advertisement