சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நாளை காலை 10 மணிக்கு காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
Advertisement