சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 940 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாகைக்கு 740 கிமீ தெற்கு-தென் கிழக்கில், திரிகோணமலைக்கு 450 கிமீ தெற்கு தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம்கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 860 கிமீ தெற்கு தென் கிழக்கிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது.
+
Advertisement