டெல்லியில் எம்பிக்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!
புதுடெல்லி: டெல்லியில் எம்பிக்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். டெல்லியின் பாபா கரக் சிங் மார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 184 வீடுகள் உள்ளது. ஒவ்வொரு வீடும் 5,000 சதுரஅடி பரப்பளவை கொண்டது.