சென்னை: டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தனக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை கோரி டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். அதில், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க சீமானுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. டிஐஜி வருண்குமார் தொடர்ந்த மனு மீது சீமான் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்துக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
+