சென்னை: 2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை இந்திய ஹஜ் அசோசியேசன் உறுதி செய்துள்ளது. எனவே ஹஜ் பயணம் செல்போர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
+
Advertisement