கடலூர்: கடலூர் மாவட்டம் வானமாதேவி, தஞ்சை கீழணையில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை செம்பனார்கோவிலில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டம், விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. லால்பேட்டை, செந்துறை, குடிதாங்கி, திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது. சூரப்பட்டு, கடலூர், விழுப்புரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காரைக்குடியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
+