திருவாரூர்: புலிவலத்தில் சண்டையை விலக்கச் சென்ற நீதிமன்ற ஊழியர் தினேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார். முகமது ஆஸம் என்பவரின் பெண் நண்பர் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்து வந்துள்ளார். பெண் நண்பர் வீட்டுக்கு வந்த முகமது ஆஸம், அவரது உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டையை விலக்க நீதிமன்ற ஊழியர் தினேஷ் முயற்சித்தபோது முகமது ஆஸமிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி முகமது ஆஸம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் தினேஷ் உயிரிழந்தார்.
+
Advertisement