தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு!!
அமராவதி: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் திமுக பிரதிநிதிகள் குழு சந்தித்தனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் சந்தித்தனர். தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக பிரதிநிதிகள் குழு அழைப்பு விடுத்துள்ளனர்.