புதுக்கோட்டை: யூகத்தின் அடிப்படையில் புதிதாக கூட்டணிக்கு வரும் கட்சிகளை பற்றி கூற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தற்போது அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது. டி.டி.வி. தினகரன் குறித்தெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். பாஜக கூட்டணியில் இருப்பதாக டிடிவி தினகரன்தான் கூறிக் கொண்டிருக்கிறார்; நாங்கள் கூறவில்லை. ஊடகங்களில் சிலவற்றைதான் கூறமுடியும்; சிலவற்றை பேச முடியாது. நாளை இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறினார்.
+
Advertisement