சென்னை: கூட்டணி கணக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதில், கூட்டணி தொடர்பாக அதிமுக தப்புக்கணக்கு போடுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த கடம்பூர் ராஜு, அதிமுக என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் என்றார். கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சிதான் அதிமுக, ஆனால் தற்போது தப்புக்கணக்கு போடுகிறீர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதற்கு கூட்டிக்கழித்து பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கு சரியாகத்தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
Advertisement


