சென்னை: முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை. முதல்வர் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை இப்போதுதான் தான் கண்டிப்பதை போல் சிலர் விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்குமாறு 2024 ஆகஸ்ட் மாதமே வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.