மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி..!!
சென்னை: மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. பூதமங்கலம், வஞ்சி நகரம், கொடுக்கப்பட்டியில் 278 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது. ரூ.68 கோடியில் அமையவுள்ள தொழிற்பூங்கா மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.